மகிந்தவுடன் தனியாகப் பேசினார் மோடி!
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைகயின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேற்று தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தனக்கெதிராக எதிரணிகளைப் பலப்படுத்துவதில் இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ முன்னின்று செயற்பட்டதாக, மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டிய சில நாட்களில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நேற்றுமாலை கொழும்பிலுள்ள இந்தியா ஹவுசில் இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை இடம்பெற்றது.இந்தச் சந்திப்பில் இந்தியப் பிரதமருடன் உதவியாளர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.மகிந்த ராஜபக்சவை மரியாதை நிமித்தம் மோடி சந்திக்க விரும்பியதாகத் தெரிவித்த இந்திய அதிகாரிகள் பேச்சுக்கள் குறித்த விபரங்களை வெளியிடவில்லை.