காணாமற்போனவர்களை மீட்டுத் தரக்கோரி நல்லூரில் உண்ணாவிதப் போராட்டம்! (படங்கள் இணைப்பு)
காணாமற்போனவர்களை மீட்டுத் தரக்கோரியும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று வெள்ளிக்கிழமை காலை நல்லூர் ஆலயச் சூழலில் உண்ணாவிதப் போராட்டம் ஆரம்பமாகியது.
காணாமற்போனோரின் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்துக்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காணாமற்போன ஒருவரின் மனைவி என்ற அடிப்படையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குகொண்டுள்ளார்.
இதேபோன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில் இன்று காலை உண்ணாவிரப் போராட்டம் ஒன்று நடத்தப்படுகிறது. இதேவேளை மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபவனி இன்று கிளிநொச்சியை வந்தடைந்து, தொடர்ந்து நல்லூரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்குகொள்ளவுள்ளது.