லலித் - குகன் விடுதலையை வலியுறுத்தி யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்!
கைதுசெய்யப்பட்டு காணாமற்போன லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று புதன்கிழமை யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தை முன்னிலை சோஷலிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர். காணாமற்போன லிலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழங்கு விசாரணை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.