Breaking News

தமிழருக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நேற்று ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழர் வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இலங்கை தொடர்பான யுத்தக் குற்ற அறிக்கையை தாமதிப்பதற்கு, அமெரிக்க ஒத்துழைப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 200க்கும் மேற்பட்டவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.