Breaking News

சர்ச்சைக்குரிய சிறிய ரக விமானம்! விமானப் படை வசம்

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருடையது என கூறப்படும் சிறிய ரக விமானம் ஸ்ரீலங்கா விமானப் படைக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

இதன்பின்னர் குறித்த சிறிய ரக விமானம் விமானப் படை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தொடர்பாக அண்மைக்காலங்களில் பலர் பல்வேறு வகையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

கலாநிதி ஆர். விஜயவர்தனவினால் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவின் தலையீட்டில் ஸ்ரீலங்கா விமானப் படைக்கு நாளை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விமானத்தின் முதல் சொந்தக்காரர் தானே என காவல்துறையினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் சந்திரன் ரத்னம் குறிப்பிட்டிருந்த நிலையில் அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான யோஷித்த ராஜபக்ஷவுக்கு தான் பரிசளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தமை அறிந்ததே.