ஒன்றரை வயது சிறுமிக்கு எமனான மண்ணெண்ணெய் - யாழில் சோகம்
ஒன்றறை வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய் விளக்குக்கு ஊற்றுவதற்காக கொண்டு வந்த மண்ணெண்ணெயை சிறுமி குடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது சிகிச்சைக்காக சிறுமி யாழ். வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டிதுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.