Breaking News

மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

கண்டியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

அந்த கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதம வேட்பாளராக மகிந்தராஜபக்ஷவை நியமிக்க வலியுறுத்தி இந்த கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. 

இதில் கலந்து கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமையால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் இதனை மீறி இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.