Breaking News

ஜெயகுமாரி விடுதலை! சட்டமா அதிபர் திணைக்களம் இழுத்தடிப்பு

 கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு ஆண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாலேந்திரன் ஜெயகுமாரியைப் பிணையில் விடுவிப்பதற்கு, சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் இழுத்தடிப்புச் செய்து வருகிறது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று இவரைப் பிணையில் விடுவிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து எழுத்துபூர்வமான பதில் ஏதும் வழங்கப்படாததால், இந்த மனுவை ஏப்ரல் 10ம் நாள் வரை ஒத்திவைப்பதாக நீதிவான் அறிவித்தார்.

இதற்கிடையே பாலேந்திரன் ஜெயகுமாரியின் பிணை மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே, ஜெயகுமாரியை விடுதலை செய்யக் காரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

தீவிரவாத புலனாய்வு பிரிவினரால், 352 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரிக்கு எதிராக எநித குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்றும், இது ஒரு குற்றச்செயல் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.