தீவகப்பகுதியில் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! விஜயகலா
தீவுப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உறுதியளித்தார்.
யாழ். மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவருடன் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் சென்றிருந்தார். இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீவகப்பகுதி வாழ் மக்களுக்கு போக்குவரத்து, வாழ்வாதாரம் உட்பட அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அடிப்படைப்பிரச்சினைகள் பல இருப்பதனை அறிவோம். எனவே அவற்றை ஆராய்ந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் மக்களிடம் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவுப்பொதியும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.