Breaking News

டோனியையே கண்கலங்க வைத்த இந்திய அணியின் தோல்வி

அவுஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்ற பிறகு டோனி கண் கலங்கிய படங்கள் பரவலாகியுள்ளன. உலகக் கிண்ணத்தை​ வெல்ல தகுதியுடைய அணியாக கணிக்கப்பட்ட இந்தியா, தொடர்ந்து 7 போட்டிகளிலும் வென்று, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

ஆனால், அரையிறுதியில் 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம், இந்தியா தோற்றது. அணித் தலைவர் டோனி இறுதிவரை நின்று போராடியும், வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சியில், இரு அணிகளின் தலைவர்களினது கருத்தையும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். அப்போது டோனியின் கருத்தை கேட்க அழைத்தபோது, தோணியின் கண்கள் கலங்கியிருந்தன.

இதை தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களும், கையடக்கத்தொலைபேசிகளில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது தற்போது பரவலாக சுற்றிவருகிறது.எந்த ஒரு விடயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் டோனியே கண் கலங்கி விட்டார் என்பதுதான் ரசிகர்களின் பெரும் ஆதங்கமாக உள்ளது.