மோடி வருகையால் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதை முன்னிட்டு கடும் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை இன்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்தார். இதன்படி இலங்கை வரும் மோடி 13ஆம் திகதியன்று பிற்பகல் 3.15க்கு இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள அலுமாரிகள் சோதனையிடப்படவுள்ளன.
பார்வையாளர் களறிகளில் பொதுமக்களுக்கு இடம்தரப்படமாட்டாது. பதிலாக விசேட அதிதிகள் மாத்திரமே அதில் அனுமதிக்கப்படுவர்.அதேநேரம் நாடாளுமன்ற வாகன தரிப்பிடம் மூடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாகனங்களை சாரதிகளின் துணையின்றி, தாங்களே செலுத்தி வரவேண்டும் என்றும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.