Breaking News

"உத்தமவில்லன்" வெளியீடு! கமலுக்கு நெருக்கடி கொடுக்குமா

இரண்டு வருடங்களுக்கு முன் 'விஸ்வரூபம்' படத்தை வெளியிட கமல்ஹாசன் சந்தித்த இன்னல்கள் அனைவரும் அறிந்ததே. முதலில் இந்த படத்தை DTHல் வெளியிட திட்டமிட்டார், ஆனால் விநியோகஸ்தர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு வந்ததாலும், முஸ்லிம் அமைப்புகள் போர்கொடி தூக்கியதாலும் இந்த படம் பல்வேறு சமரசங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளிவந்து வெற்றியும் பெற்றது.

அந்த சமயத்தில், விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் மீதும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மீதும் கமல் இந்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கமலுக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வரும் என தெரிகிறது.

இந்நிலையில் கமலின் அடுத்த படமான 'உத்தமவில்லன்' விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சென்னை பகுதி விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, மேலே கூறிய வழக்கை திரும்ப பெறும்படி அவர் கமலுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம். ஆனால் அதற்கு கமல் முடியாது என தெளிவாக கூறிவிட்டாராம்.