இந்தியா தோற்றது மிகுந்த மகிழ்ச்சி! பிரபல இயக்குனர் கருத்தால் பரபரப்பு
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தியது.
ஆனால் இந்தியா துரதிர்ஷ்டவசமாக தோற்று வெளியேறியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது டிவிட்டர் வலைதளத்தில் இந்தியா தோல்வி அடைந்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
ராம் கோபால் வர்மா தனது டிவிட்டரில் தெரிவித்தவை, இந்தியா தோற்றதில் எனக்கு மகிழ்ச்சி தான், ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. அதை மீறி எனக்கு ஆர்வம் வந்தாலும் கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்களை தான் வெறுப்பேன்.
கிரிக்கெட் தான் இந்திய மக்களை சோம்பேறிகளாக்குகிறது. இது மது மற்றும் சிகரட்டை விட மிகக் கொடிய நோய் என்றும் அதிலிருந்து விடுவிக்க அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொள்கிறேன்.
மேலும் அனைத்து அணியினரிடமும் எங்கள் இந்திய அணியை மீண்டும் மீண்டும் தோற்கடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.