வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தை ஆசிரியர்கள் மூடி போராட்டம்!
வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வெளியே செல்லவிடாமல் தடுத்து தமது நியாயமான கோரிக்கையை முன்வைத்தனர்.ஐந்து வருடங்களாகக் கடமையாற்றி இடமாற்றம் கோரியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாகவே இந்தப் போராட்டம் காலைமுதல் இரவு 9 மணிவரை இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை காலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சில் ஒன்று கூடிய கஷ்டப் பிரதேசத்தில் கடமையாற்றி இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக இன்று இடமாற்றக் கடிதம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் வடமாகாணக் கல்வி அமைச்சை வலியுறுத்தி அமைச்சின் கதவுகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சின் நுழைவாயிலை அடைத்த ஆசிரியர்கள் வாயிலில் அமர்ந்து கொண்டனர். இரவு 9 மணிவரை இடம்பெற்ற முற்றுகைப் போராட்டம் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து முடிவுக்கு வந்தது.