காணாமல் போனோர் பற்றிய இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்
காணாமற் போனோர் தொடர்பான முறைப் பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற்போனோர் பற்றிய தகவல்களை ஆராயும் நோக்குடன், காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
குறித்த ஆணைக்குழுவுக்கு இதுவரை சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.