Breaking News

இலங்கைத்தேர்தல் மாற்றங்கள் சிறுபான்மைக் கட்சிகளை பாதிக்கும் - டக்ளஸ் கவலை

இலங்கையின் தேர்தல் முறைமைகளில் முன்னெடுக்கப்படும் மாற்றங்கள் இலங்கை சிறுபான்மையினருக்கான கட்சிகள் மற்றும் சிறிய அரசியல்கட்சிகளை பாதிக்கும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


இலங்கையின் உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் திங்களன்று (16/03/2015) இரவு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கூடி கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, நவசமாஜ கட்சி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.