Breaking News

சரத் பொன்சேகாவுக்கு இந்தியா அவசர அழைப்பு!

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இந்தியா அரசாங்கத்தின் திடீர் அழைப் பொன்றையடுத்து புதுடில்லி பயணமாகியுள்ளார். ‘றோ’வின் ஏற்பாட்டில் இந்திய அரசாங்கம் இந்த அழைப்பை விடுத்ததாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா, இந்திய உளவு பிரிவான றோ அமைப்பின் முக்கியதஸ்கர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இதனைவிட இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் அவரைச் சந்திக்கவுள்ளார்கள்.

எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமிக்கப்பட உள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இந்தியா அவசரமாக அழைப்பு விடுத்தமைக்குக் காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஜெனரல் பொன்சேகா, தனது இந்திய விஜயத்தின் போது, இந்தியாவின் பிரதான அரசியல்வாதிகள் சிலரை சந்திக்க உள்ளார். அத்துடன் இந்தியாவின் உளவு அமைப்பான றோ அமைப்பின் உயர் அதிகாரிகளையும் பொன்சேகா சந்திக்க உள்ளார் என மட்டும் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன..

இந்திய உளவுப் பிரிவின் இலங்கைக்கான முன்னாள் பொறுப்பதிகாரியான பிரபாமூர்த்தி, பொன்சேகாவின் இந்திய விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் முக்கிய அதிகாரியாக பிரபா மூர்த்தி கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.