Breaking News

கிளிநொச்சியில் காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டம்! ( படங்கள்,காணொளி இணைப்பு)

இலங்கையில் இராணுவத்தாலும் ஒட்டுக் குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளையும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல்போனோரின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் இன்று காலைமுதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தபோராட்டத்தில் காணாமல்போனோரின் உறவினர்கள் ,அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் பங்கேற்று நடத்திவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.