Breaking News

இன்று இலங்கை வருகிறார் சுஸ்மா!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இரண்டுநாள் பயணமாக இன்று  இலங்கைக்கு  வரவுள்ளார்.

இன்று கொழும்பு வரும் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில், இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா வரவேற்பார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்கவே, சுஸ்மா சுவராஜ் கொழும்பு வரவுள்ளார். 

எனினும், கடந்த மே மாதம், இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சுஸ்மா சுவராஜ் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவர் இலங்கை பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்தித்தப் பேசவுள்ளார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் அவர் நாளை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.