நாளை பிரித்தானியா செல்கிறார் ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் பிரித்தானியா செல்லவுள்ளது.
இலங்கை ஜனாதிபதியுடன் பிரித்தானியா செல்லும் குழுவில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஊடக குழுவை சேர்ந்த ஒருவர் ஆகியோரே இடம்பெறவுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பயணத்தின் போது, கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில், இலங்கை ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஷ் சர்மாவும் பங்கேற்பார். மேலும் அவர் பிரித்தானியாவில் தங்கியிருக்கும் போது, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தையும் சந்தித்துப் பேசுவார்.என தெரிவிக்கப்படுகின்றது.