உலக கிண்ண காலிறுதி சுற்றுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறியது.
ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கு எதிரான இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு ராஜ்சியம், 47.4 ஓவர்களில் 175 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 117 பந்துகளை மீதம் வைத்து போட்டியில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் காலிறுதி சுற்றுக் தெரிவாகக்கூடிய வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது. தற்போது பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தெரிவாகும். அதேநேரம் இந்த போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தாலோ, அல்லது கைவிடப்பட்டாலோ, மேற்கிந்திய தீவுகளின் காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பு அற்றுப் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.