Breaking News

ஐ.நா அறிக்கை செப்டெம்பரில் வெளிவரும்! விக்கியிடம் வெல்ட்மன் உறுதி (படங்கள் இணைப்பு)

இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நிச்சயம் கொண்டு வரப்படப்படுமென யாழ் வந்த ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களிற்கான பிரதிச் செயலாளர் ஜெப்ரி வெள்ட்மன் வடக்கு முதலமைச்சரிம் உறுதியளித்துள்ளனர். 

இலங்கைக்கு விஐயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களிற்கான அலுவலக உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை காலை யாழப்பாணத்திற்கு வருகை தந்து வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

காலை 11 மணிமுதல் மதியம் 12.30. வரை சுமார் ஒரு மணித்தியலங்கள் இடம்பெற்ற இந்த நீண்ட நேரம் வடக்கு முதலமைச்சர் தலைமையிலான மாகாண அமைச்சர்களுக்கும் ஐ.நா அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்.

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்புப் பிரேரணை தற்போது கொண்டு வரப்பட்டமை குறித்து கேட்டிருந்தனர். இங்கு நடைபெற்ற அநீதிகள் இழப்புக்கள் மனித உரிமை மீறல்கள் என்பன வெளிவர வேண்டும் என்றும் அதன் மூலமே தமிழ் மக்களிற்கு உண்மையான நீதி கிடைக்கும் மாறாக உண்மைகள் இப்போதும் வெளிப்படுத்தப்படா விட்டால் தமிழர்களுக்கான நீதி எப்போதும் மறைக்கடிக்கப் பட்டு விடக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு என்பது தொர்பிலும் சுட்டிக்காட்டினேன். மேலும் இதற்கு நீதி வேண்டுமென்றே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இன்று சர்வதேசத்திடம் கேட்கின்றனர்.

மேலும் ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பிலும் நான் ஐ.நா அதிகாரிகளிடம் கேட்டிருந்தேன். இதற்கு அவர்களும் பல காரணங்களைக் கூறி எனக்கு உறுதிமொழி ஒன்றையும் வழங்கியிருந்தனர்.இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்தற்காக மட்டும் நாம் பிற்போடவில்லை.சில நாடுகள் இலங்கை அரசிற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் அறிக்கை வெளியிடுவதை பிற்போடுமாறும் கோரியிருந்தனர். இதற்கமையவே அறிக்கையை பிற்போட்டுள்ள அதே வேளையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அதனை திட்டமிட்டபடி வெளியிட உள்ளோம் என்றும் எம்மிடம் நேரடியாகவே தெரிவித்தனர் என்று முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது மேலும் தெரிவித்தார்.