மகிந்தவை வீட்டுக்கனுப்பியதால் தப்பித்த தமிழர் நிலங்கள்! சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு
வவுனியா வடக்கு நெடுங்கெணி பிரதேசசெயலர் பிரிவில் தென்னிலங்கைவாசிகள் இருவரால் கையகப்படுத்தப்பட்ட 900 ஏக்கரி காணி ஆட்சிமாற்றத்தின் காரணமாக தப்பித்துள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணி பிரதேசசெயலக பிரிவில் கடந்த ஆண்டின் இறுதியில் இரகசியமான முறையில் இருவருக்கு மகிந்த அரசால் நிலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தது. பண்ணை அமைக்கவென ஒருவருக்கு 500 ஏக்கரும், மதுபான உற்பத்திநிலையம் அமைக்க இன்னொருவருக்கு 400 ஏக்கரும் வழங்கப்பட்டது. இவர்கள் அங்கிருந்த பெரும் காடுகளை அழித்தார்கள். இதற்கு சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இது பற்றி பிரஸ்தாபித்திருந்தனர்.
இந்தநிலையில் மகிந்த ராஜபக்ச வீட்டுக்கனுப்பப்பட்டதும், இவர்கள் இருவரும் நிலங்களை கைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகிவிட்டதாக சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.