இப்போதைக்கு ஓய்வு வில்லை - கெயில் அதிரடி அறிவிப்பு
தாம் தற்போதைக்கு எந்த வகையான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப் போவதில்லை என்ற மேற்கிந்திய கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் கிறிஸ்கெயில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் தாம் இங்கிலாந்துடன் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
காயத்தில் இருந்து குணமடைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அடுத்த 20க்கு20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியிலும் விளையாடும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.மேற்கிந்திய தீவுகள் அணிக்காக தொடர்ந்தும் முடிந்த பங்களிப்பை வழங்குவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.