Breaking News

இந்திய மீனவர்களைத் தாக்கவில்லை! மறுக்கும் இலங்கை

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை பாதுகாப்புப் பிரிவினர் மறுத்துள்ளனர். 

அப்படி எந்தவொரு தாக்குதலும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படவில்லை என, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.  கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டன. 

இதனால் ஐந்து மீனவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.  மேலும் இவர்கள் இராமேஸ்வரம் மீனவர்கள் எனவும் தகவல் வெளியானது.  எதுஎவ்வாறு இருப்பினும் இது பொய்யான குற்றச்சாட்டு என, பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.