இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்த தமிழக அரசு விருப்பம்!
இலங்கை– தமிழக மீனவர்கள் இடையே எல்லையில் மீன் பிடிப்பது தொடர்பாக உள்ள பிரச்சனைகளை களைய, இரு நாட்டு மீனவர்கள் பிரதிநிதிகள் ஏற்கனவே 2-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்
இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான 3–வது கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 5-ம் திகதி நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில், 11-ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கொழும்பில் இருந்து செய்திகள் வந்தன. இதனால் பேச்சுவார்த்தை தள்ளிபோனது.
இந்நிலையில் வரும் 24ம் திகதி இந்திய- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்த தமிழக அரசு விருப்பம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிள்ளது. அத்துடன் தமிழகத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவித்தள்ளது.