இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண இலங்கை முயற்சி - த ஹிந்து
த ஹிந்து பத்திரிகை தமது ஆசிரிய தலையங்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு வாரக் காலத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
புதிய அரசாங்கம் இலங்கையில் பதவி ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள் சீனாவை பாதிக்கும் வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக 1.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சீனாவின் துறைமுக நகர நிர்மாணப் பணிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து சீன அரசாங்கம் கரிசனை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு நிகராக சீனாவுடனான உறவையும் சமநிலையில் பேணும் வகையிலான செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுப்பதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.