பகீரதியை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைக்க உத்தரவு!
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட பகீரதியை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைக்க தீர்மானித்துள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
முருகேசன் ஜெயகனேஷ் பகீரதி எனும் 41 வயதான இவர், கடந்த திங்கள்கிழமை தனது எட்டு வயது மகளுடன் விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
பிரான்ஸில் வசித்து வந்த இவர் அண்மையில் தனது தாயைப் பார்க்க கிளிநொச்சிக்கு வந்த நிலையில் மீண்டும் பிரான்ஸிற்கு செல்ல முற்பட்ட வேளையிலே சந்தேகத்தின் பேரில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இவரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு கிடைத்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர் காவற்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் வசம் உள்ளதாகவும், அவரது மகள் அவருடன் இருக்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.