இலங்கையில் 80 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளார்கள்! ஜெனீவா அதிர்ச்சி தகவல்
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையமாக கொண்டு, இலங்கையில் காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் உப மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. 1983 க்குப் பின்னர் 80 ஆயிரம் பேர் இலங்கையில் காணாமல் போயுள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் இங்கு வெளியிடப்பட்டது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டில் ஐ.நாவின் காணாமல் போனவர்கள் மற்றும் துன்புறுத்தல் விவகாரங்களுக்கான சிறப்புபிரதிநிதி பங்கெடுத்திருந்தார்
இலங்கையிலிருந்து ஆகிய காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்து வரும் ரூக்கி பெர்னான்டோ, பவானி பொன்சேகா, சந்தியா எகனியாகொட ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர். கருத்துரைகள், ஒளிப்படங்கள், புள்ளிவிபரங்கள் என அமைந்திருந்த இந்த உபமாநாட்டில், 1983ம் ஆண்டிலிருந்து 80 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணமல்போனவர்களது உறவினர்களது போராட்டங்கள் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர், போராட்டங்களுக்கு செல்வோர் தடுக்கப்படுவது, பௌத்த பிக்குகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது போன்ற பல்வேறு விடயங்கள் ஒளிப்படச் செய்திகளாக காண்பிக்கப்பட்டுள்ளன.