இலங்கையை சேர்ந்த 5 மீன்பிடி படகுகளும் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு
தூத்துக்குடி, இந்திய கடல் எல்கைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த 5 மீன்பிடி படகுகளும் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது இதனையடுத்து பிடிப்பட்ட இலங்கையை சேர்ந்த 5படகுகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடல் எல்கைக்குள் அத்துமீறி நுழைந்து கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கே 55கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த கவிசாதுவா,தேவ்மன் மற்றும் செயின்ட் பீட்டர் உள்ளிட்ட 3மீன்பிடி படகுகளை கடந்த மேமாதம்&2014 இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான வைபவ் ரோந்துப்பணியின் போது அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் கொண்டுவரப்பட்டது.
இதேபோல் கடந்த அக்டோபர்&2014 மாதத்தில் இந்திய கடலோர கடற்படைக்கு சொந்தமான வைபவ் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்தபோது கன்னியாகுமரியில் இருந்து 110கடல்மைல் தொலைவில் இந்திய எல்கைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை தொடுவாப்பகுதியை சேர்ந்த சடேவ்புத்தா,ரங்காபுத்தா என்ற இரண்டு மீன்பிடிப்படகுகளை சுற்றிவளைத்து மீன்பிடிப்படகினை பறிமுதல் செய்தனர்.
தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான 5மீன்பிடிப்படகுகளையும் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த்து. இதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து மீன்பிடிப்படகுகளை கொண்டு செல்வதற்காக சிலதினங்களுக்கு முன்பு இலங்கையை சேர்ந்த 14மீனவர்கள் தூத்துக்குடி வந்தனர்.
இவர்கள் பிடிப்பட்ட 5மீன்பிடிபடகுகளும் நீண்டநாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் அதனை பழுதுபார்க்கும் பணியினை மேற்கொண்டனர். தற்போது படகுகளின் பழுதுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பிற்பகலில் (2.45) தூத்துக்குடி பழையதுறைமுகத்தில் இருந்து 11மீனவர்கள் இலங்கைக்கு கொண்டு சென்றனர். இலங்கை மீன்பிடிப்படகுகளை இந்திய கடலோர காவல்படையினர் அழைத்து சென்று சர்வதேச கடல்எல்கையில் இன்று இரவு அல்லது நாளைக்குள் இலங்கை படையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.