எம்மைப் பற்றி
தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உருவாக்குதல் மட்டுமல்ல, தமிழர்களும் கலை பண்பாட்டு தொழிநுட்ப வணிக சமூக வாழ்வியல் ரீதியாக முழுமைபெற்ற இனமாக வளர்ந்து நிலைபெறவேண்டும்.
தியாகவேள்வியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களையும், அவர்தம் வழியில் ஒன்றித்து பயணித்த எம்முறவுகளின் ஈகமும், தமிழர்களுக்கான புதியதோர் உலகத்திற்கான அடித்தளத்தை இட்டது போல, அதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்லவேண்டிய பாரிய பொறுப்பு எம்மனைவர் கையிலும் உண்டு.
சமூகத்திற்கு தேவையான செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் பொறுப்புடன் - நாளுக்குநாள் வளர்ந்துவரும் நவீனதொழிநுட்பங்களை பயன்படுத்தி - கொண்டுசெல்லவேண்டிய பணியுண்டு. அப்பணியை எம்மால் முடிந்தவரை மேற்கொள்ள, தமிழ்கிங்டொம் இணையம் வாயிலாக உங்களுடன் இணைகின்றோம்.
வரையறுக்கப்பட்ட வளத்துடனும், ஒருசிலரின் துடிப்பான ஆதரவோடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருவதோடு, இவ்இணைய தளத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கின்றோம். தமிழ் எழுத்துத்துறையில் ஆர்வமுடையவர்களிடமிருந்து காத்திரமான படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.
சாதாரணமாக ஆரம்பமான எமது இணையத்தளமானது, கடந்த ஐந்து மாதங்களிலேயே எட்டு இலட்சம் பார்வைகளை(Viewers) பெற்றுள்ளது என்பதனை வாசகர்களுக்கு பெருமையுடன் அறியத்தருவதோடு, எதிர்வரும் காலத்தில் மேலும் உத்வேகத்துடனும், புதிய மாற்றங்களோடும் வெளிவரும் என்பதனை அறியத்தருகின்றோம்.
குறிப்பு:-
தமிழ்கிங்டொம் ஊடகத்திற்கு செய்தியாளராகவோ அல்லது விளம்பரதாரராகவோ செயற்பட ஆர்வமிருப்பவர்கள் மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மின்னஞ்சல் முகவரி - tamilkingdomnews@gmail.com
உண்மையின் குரலாய் உங்கள் முன் பணியைத் தொடக்குகிறோம்.