ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 220 பேரில் 19 பேர் விடுதலை
ஐ.ஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரியா நாட்டுக் கிறிஸ்தவர்களில் 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி சிரியாவிலுள்ள 12 கிராமங்களைச் சுற்றிவளைத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கிருந்த 220 கிறிஸ்தவர்களை பணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 19 பேரில் மூவர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் விடுதலை தொடர்பாக ஐ.எஸ் தீவிரவாதிகள் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
எவ்வாறாயினும் கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கும் அதிகமானவர்கள் என்றபடியால் அவர்களில் சிலர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை ஐ.எஸ் தீவிரவாதிகள் இவர்களின் விடுதலைக்காக கப்பம் கோரியிருந்ததாகவும், அந்தப் பணத்தொகை செலுத்தப்பட்டிருக்கும் நிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.