Breaking News

உலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை! முன்னிலையில் இருக்கும் சங்கக்கார

கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் இம்முறை உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பித்தன.

ஆரம்பம் முதலே விறுவறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன.

அவை தொடர்பிலான பார்வை இ​தோ,

அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர்கள்:

சங்கக்கார – 496 ஓட்டங்கள்
பிரண்டன் டெய்லர் (ஸிம்பாப்வே) – 433 ஓட்டங்கள்
டி வில்லியர்ஸ் – 417 ஓட்டங்கள்
டில்சான் – 395 ஓட்டங்கள்
மஹ்மதுல்லா – 344 ஓட்டங்கள்
அதிகூடிய தனிப்பட்ட ஓட்ட எண்ணிக்கை :
கிறிஸ் கெய்ல் – 215 ஓட்டங்கள்
வோர்னர் – 178 ஓட்டங்கள்
டி வில்லியர்ஸ் – 162 ஓட்டங்கள்(ஆ.இ)
டில்சான் – 161 ஓட்டங்கள்(ஆ.இ)
அம்லா – 159 ஓட்டங்கள்

அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் :

மிச்சல் ஸ்டார்க் – 16 விக்கெட்டுக்கள்
போல்ட் – 15 விக்கெட்டுக்கள்
முகம்மது சமி – 15 விக்கெட்டுக்கள்
டேவி (ஸ்கொட்லாந்து) – 15 விக்கெட்டுக்கள்
டெய்லர் – 14 விக்கெட்டுக்கள்

அணிகளின் அதிகூடி ஓட்ட எண்ணிக்கை :

அவுஸ்திரேலியா – 417/6 எதிர் ஆப்கானிஸ்தான்
தென்னாபிரிக்கா – 411/4 எதிர் அயர்லாந்து
தென்னாபிரிக்கா – 408/5 எதிர் மேற்கிந்தியத்தீவுகள்
அவுஸ்திரேலியா – 376/9 எதிர் இலங்கை
மேற்கிந்தியத்தீவுகள் – 372/2 எதிர் ஸிம்பாப்வே

அதிகூடி பவுண்டரிகளைப் பெற்ற வீரர் – சங்கக்கார (54)
அதிகூடி 6 ஓட்டங்களைப் பெற்ற வீரர் – டி வில்லியர்ஸ்(20)
அதிகூடிய சதங்களைப் பெற்ற வீரர் – சங்கக்கார (4)

வரலாற்றில் தொடர்ச்சியாக 3 சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையை சங்கக்கார படைத்தார்.ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையையும் சங்கக்கார தன் வசப்படுத்தினார்.

உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு அணி பெற்ற அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற அணி எனும் சாதனையை அவுஸ்திரேலிய அணி 417 ஓட்டங்களைப் பெற்றுப் படைத்தது. இதற்கு முன்னர் இந்த சாதனை இந்தியா வசமே காணப்பட்டது.

உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு உலகக் கிண்ணத்தில் அதிகூடிய சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையை சங்கக்கார தன் வசப்படுத்தினார்.ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 500 ஆட்டமிழப்புக்களை செய்த முதல் வீரர் என்பதுடன், உலகக்கிண்ணத்தில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்திருந்த (52) அடம் கில்க்ரிஸ்ட்டின் சாதனையையும் தாண்டினார் சங்கக்கார.

அவு​ஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா 2038 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.வெளிநாட்டு வீரர் ஒருவர் ​அவுஸ்திரேலியாவில்​பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இவையாகும்.அத்துடன் அவுஸ்திரேலியாவில் 5 சதங்களைப் பெற்றுள்ள ஒரே ஒரு வௌிநாட்டு வீரர் சங்கக்கார.இலங்கை அணி சார்பான இரண்டாம் விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனை புதுப்பிக்கப்பட்டது.