19ம் திருத்தச் சட்டம் தொடர்பான மனுக்கள் நாளை விசாரணை!
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்காக மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சந்திரா ஏகநாயக்க மற்றும் பிரியசாத் டெப் ஆகியோரும் இதில் அடங்குகின்றனர். இதன்படி நாளை 19ம் திருத்தச் சட்டம் குறித்து இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் விசாரணை செய்யப்படவுள்ளன.
19ம் திருத்தச் சட்டம் நீதிக்கு முரணானது எனக் கூறி 11 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலும் நான்கு மனுக்கள் குறித்த சட்டத்தை நிறைவேற்ற மக்கள் வாக்கெடுப்பு அவசியம் இல்லை என தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை 19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அவசியம் என உத்தரவிடுமாறு கோரி, ஜாதிக ஹெல உறுமய இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.