வடமாகாணத்துக்கு புதிதாக 160 தாதியர்கள் நியமனம்
வடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்காக 160 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
நியமனம் பெறுபவர்கள், வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் தேவைக்கு ஏற்றவாறு பணிக்கு அமர்த்தப்படுவர். வடமாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்படி அரசிடம் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
நியமனம் பெறும் தாதியர்கள், தேவையின் அடிப்படையில் முன்னுரிமையளிக்கப்பட்டு, வைத்தியசாலைகளில் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.