Breaking News

16 புலம்பெயர் அமைப்புகள், 424 நபர்கள் மீதான தடையை நீக்குகிறது இலங்கை அரசு

முன்னாள் அரசாங்கத்தினால் புலம்பெயர் அமைப்புகளுக்கும், சில நபர்கள் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 16 அமைப்புகள் மற்றும் 424 நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த அறிவிப்பை அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் வெளியிட்டிருந்தார். நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பிருப்பதாக என்ற பொய்யான வதந்தியைப் பரப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் அந்த நிலைப்பாடை மாற்றுவதற்கு தற்போதைய புதிய அரசாங்கம் முன்வந்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 நபர்கள் மீதான தடையை விரைவில் நீக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.