13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு தர முடியாது – கைவிரிக்கிறது இலங்கை!
அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும் எண்ணம், ஏதும், இலங்கையில் தற்போதைய அரசாங்கத்துக்குக் கிடையாது என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில், 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணுமாறு கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று மேலதிக அதிகாரங்களோ, காவல்துறை அதிகாரங்களோ வழங்கப்படாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.