இலங்கைத் தமிழர்களுக்காக 108 கோடி இந்திய ரூபாய்கள் தமிழக அரசாங்கத்தால் ஒதுக்கீடு
இலங்கைத் தமிழர் நலனுக்காக 108 கோடி இந்திய ரூபாய்களை தமிழக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2015 – 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து நலத் திட்டங்களின் பயன்களையும் விரிவுபடுத்தி வழங்கிவருவதுடன் அவர்களுக்கான உதவித் தொகையையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்தோடும் மரியாதையோடும் வாழ்வதற்குத் தேவையான முழுமையான ஆதரவை தமிழக அரசு வழங்கிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.