Breaking News

அரசியல் தீர்வுக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் – மாவை

அரசியல் தீர்வுக்கு முன்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.


கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் நடைபெற்ற புதிர் பொங்கல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கந்தபுரம் கரும்பு தோட்டம் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சமய நிகழ்வுகளுடன் பாபரம்பரிய முறையில் வட மாகாண விவிசாய அமைச்சர் ஐங்கர நேசனால் இதன் போது நெற்புதிர் எடுத்து வரப்பட்டது.

இதன் போது மாவை சேனாதிராஜா பின்வருமாறு தெரிவித்தார்

இந்த அரசு ஆட்சி அமைக்க முன்னராக நாம் அவர்களிடம் பின்வரும் விடயங்களை கேட்டருந்தோம்.  எங்களது நிலம் எந்த நிலத்திலிருந்து எங்களது மக்கள் வெளியே அனுப்ப பட்டார்களோ அகதிகளாக்க பட்டார்களோ அவர்கள் சொந்த இடத்தில் குடியமர்த்தப்பட வேண்டும். அப்போது இராணுவத்திடம் கையில் இருக்கின்ற மக்களின் நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேறிதான் ஆக வேண்டும்.சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எங்களது இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டம்  மன்னிப்பளிக்கப்பட வேண்டும். காணாமல் போனவர்களுக்கு இந்த அரசாங்கம் விடை கொடுக்க வேண்டும். கண்ணீர் விடுகின்ற தாய்மார்களுக்கு இந்த அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். எங்களது பெண்களுக்கு எங்கள் மண்ணிலே பாதுகாப்பு வேண்டும். இவை தான் ஒரு அரசியல் தீர்விற்கு முன்னர் கிடைக்க வேண்டிய உடனடியாக அடையாளம் காணப்பட்டு தீரக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கின்றோம்.