Breaking News

மேற்கிந்தியாவை பதம் பார்த்த அயர்லாந்து வாரலாற்று வெற்றியை பதிவுசெய்தது

அயர்லாந்து அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டம் கைகொடுக்க மேற்கிந்திய அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில், 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகின்றது. நியூசிலாந்தின் நெல்சன் நகரில் இன்று நடைபெற்ற ‘பி’ பிரிவு லீக் போட்டியில், பலம் வாய்ந்த மேற்கிந்திய அணியை கத்துக்குட்டி அணியான அயர்லாந்து அணி சந்தித்தது. 

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களை பெற்றது.மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சிம்மொன்ஸ் 102 ஓட்டங்களையும் சமி 89 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அயர்லாந்து அணி சார்பாக பந்துவீச்சில் டொக்ரெல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்நிலையில் 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சுக்களை சிதறடித்து 45.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

அயர்லாந்து அணி சார்பாக ஸ்டிர்லிங் 92 ஓட்டங்களையும் ஜொய்ஸி 84 ஓட்டங்களையும் ஓ பிரைய்ன் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.மேற்கிந்தியத தீவுகள் அணி சார்பாக பந்துவீச்சில் டெய்லர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அயர்லாந்து அணி 45.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று “பி”பிரிவில் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளை பெற்று 3 ஆவது இடத்திலுள்ளது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக அயர்லாந்து அணியின் ஸ்டிர்லிங் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.