பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரங்கள் பறிப்பு
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அதிகாரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரெனக் குறைத்துள்ளார்.
இதுதொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13ம் நாள் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் அவரிடம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள முக்கியத்துவமற்ற நான்கு துறைகளை மேற்பார்வை செய்யும், கண்காணிக்கும் பொறுப்புகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அற்றும் அதிகாரிகள் கல்லூரி, ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, தேசிய கடெற் படையணி ஆகிய துறைகளை மேற்பார்வையிடும் பொறுப்புகள் மட்டுமே, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த பெப்ரவரி 10ம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி இந்தியப் பயணத்துக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த மாத முதல் வாரத்தில், பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன வடக்கு, கிழக்கில் உள்ள படைத்தளங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, படையினருடன் கலந்துரையாடிய நிலையில், அவரது அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.