இலங்கை அணியால் முடியும்
எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் போது இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் தமது அனுபவ ஆட்டங்களை நிரூபிப்பர் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் மற்றும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கிரஹம் ஸ்மித் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான தொடர்களில் இலங்கை பின்னடைவை கண்டபோதும் ஏனைய போட்டிகளில் இலங்கை அணி தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளதுஏற்கனவே இலங்கை அணி 2007 ஆம் ஆண்டும் 2011 ஆம் ஆண்டும் உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்ததுஅதேநேரம் கடந்த வருடம் பங்களாதேஸில் இடம்பெற்ற 20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில்; இலங்கை கிண்ணத்தை வென்றது