போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு - கூட்டமைப்பினர் சந்திப்பு
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் குழுவினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
அடுத்த மாதத்தில் விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
விசாரணை குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்ராஸை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேசினார். இதன்போது குழுவின் அறிக்கை திட்டமிட்டப்படி பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும் இந்தக்கோரிக்கைக்கு சண்ட்ரா என்ன பதிலை வழங்கினார் என்ற தகவல் வெளியாகவில்லை.ஏற்கனவே குறித்த அறிக்கை சமர்ப்பிப்பை தாமதிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. அத்துடன் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணையை கோரிய அமெரிக்காவும் ஆதரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதேவேளை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு தாமதிக்கப்படுமானால், அறிக்கை தொடர்பில் எந்த நம்பிக்கையையும் கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.