Breaking News

மகிந்தவை ஓரம்கட்டும் மைத்திரி மற்றும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வழங்குவதில்லை என அந்த கட்சியின் தற்போதைய தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் அகில இலங்கை செயற்குழுவில், சுதந்திரக் கட்சியை அழித்த கடும் ஊழல்வாதியான மகிந்த ராஜபக்சவுக்கு பொறுப்பான வாய்ப்பை வழங்கினால் தான் கடும் தீர்மானம் ஒன்றை எடுக்க போவதாக சந்திரிக்கா, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் சந்திக்கா பண்டாரநாயக்க, கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவ்வப்போது அழைத்து கட்சியை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளார்.