மட்டக்களப்பில் காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம் (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தில் 500க்கும் அதிகமான பெண்கள் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் ஒரு பகுதியினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்தனர்.
காணாமல் போனோர் கடைசியாக அணிந்திருந்த ஆடைகளும் போராட்டத்தின் போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.