நாங்கள் ஆஸ்கார் வாங்கியதாக உணர்கிறோம்- க்ரெய்க் மேனுக்கு கமல் வாழ்த்து
கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு க்ரெய்க் மேன் சவுண்ட் மிக்சிங் செய்துள்ளார். ‘ஜாஸ்’ இசை கற்கும் முதல் வருட மாணவனின் இசை வெறியைப் பற்றிய திரைப்படம் ‘விப்லாஷ்’.
இசையைப் பற்றிய ஒரு திரைப்படத்திற்கு, இசையமைப்பாளரின் பணி எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதை விட முக்கியமானது ஒரு சவுண்ட் மிக்சிங் கலைஞரின் பணி. இத்திரைப்படத்தில் வரும் துல்லியமான, அதிர்வூட்டும் ட்ரம்ஸ் இசைக்குச் சொந்தக்காரர் கனடாவை சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணரான க்ரெய்க் மேன்.