ஆட்சி மாறினாலும் ஆக்கிரமிப்பு மாறவில்லை! வலிகாமத்தில் புதிய நீச்சல் தடாகம் (படங்கள் இணைப்பு)
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் படையினருக்கான நீச்சல் தடாகம் மற்றும் படையினருக்கான கிளப் ஆகியனவற்றை படைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க திறந்து வைத்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயம் விடுவிக்கப்படும் என்னும் நம்பிக்கை எழுந்திருக்கும் சமகாலத்தில் படையினருக்கான நீச்சல் தடாகத்தினை ஜெனரல் தயா ரத்நாயக்க கடந்த வியாழக்கிழமை திறந்து வைத்துள்ளார்.
குறித்த பகுதியில் பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் தல்செவன உல்லாச விடுதியிலேயே குறித்த நீச்சல் தடாகம் மற்றும் படையினருக்கான கிளப் ஆகியனவற்றை படைத்தளபதி ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.மேலதிகமாக இந்த நிகழ்வில் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் மறுபக்கம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்ற பேச்சை நம்பிய வலி,வடக்கு முகாம் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் விரைவில் மீள்குடியேறும் கனவுடன் காத்திருக்கின்றமையும்,
புதிய மீள்குடியேற்ற அமைச்சு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காணிகள் குறித்த தகவல்களை, சேகரித்துக் கொண்டிருக்கின்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.