சிறையில் அடைக்கப்பட்ட திஸ்ஸவை எதிர்க்கட்சித் தலைவர் பார்வையிட்டார்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழுவினர் இன்று சென்று பார்வையிட்டனர்.
எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க, பந்துல குணவர்த்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, லக்ஷ்மன் வசந்த பெரேரா மற்றும் லலித் திஸாநாயக்க ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்று எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.