புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு
புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுவின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதன் மூலம் அந்தப் பகுதி வாக்காளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உள்ளூர் தேவாலயப் பிரதிநிதிகள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலை நாளை நடத்துவதற்கான ஒழுங்குகளை இலங்கை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இன்று காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை அனுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.