யு சான்றிதழ் பெற்றுள்ள முதல் பேய்ப் படம்’ஓம் சாந்தி ஓம்’
வழக்கமாக பேய் ,பிசாசு, ஆவி சம்பந்தப் பட்ட படங்கள் என்றால் பயமுறுத்தும் திகில் படங்கள் என்றுதான் கருதப்படும்.
அண்மைக் காலமாக இப்படிப்பட்ட படங்கள் நகைச்சுவை கலந்து வரும்போது
ரசிக்கப் படுகின்றன.‘பிசாசு’ ‘டார்லிங்’ படவெற்றிக்குப் பின்னர் குடும்பத்தினர் விரும்பி ரசிக்கும் நட்சத்திரங்களாக பேய்களும் ஆவிகளும் மாறிவருகின்றன.
ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘ஓம் சாந்தி ஓம்’ படம் ஆவி சம்பந்தப்பட்ட கதை என்றதும் திடீரென்று இப்படத்துக்கு எதிர்பார்ப்பும் வணிக வியாபார விசாரணைகளும் அதிகரித்து வருகின்றன.படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துடன் நீலம் உபாத்யாயா நாயகியாக நடிக்கிறார்.
‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், மலையாளநடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.குறிப்பாக வழக்கமாக கொடூர வில்லனாக மிரட்டும் ‘நான் கடவுள் ‘ராஜேந்திரன், இப்படத்தில் வவ்வால் பாண்டியாக முழுநீள நகைச்சுவை பாத்திரத்தில் கலகலப் பூட்டி கலக்குகிறார். படத்தை இயக்கியுள்ளவர் டி.சூர்யபிரபாகர்.
இவர் எஸ். ஜே. சூரியா ,ராஜேஷ்.எம்ஆகியோரிடம் பணிபுரிந்தவர்.ஒளிப்பதிவு கே.எம். பாஸ்கரன், இசை-விஜய் எபிநேசர்.படம் பற்றி 8 பாயிண்ட் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் பி.அருமைச்சந்திரன் கூறும் போது.
” இது ஆவி சம்பந்தப்பட்ட திகில் நகைச்சுவை கலந்த கதைதான்.
ஐந்து ஆத்மாக்கள் சம்பந்தப்பட்ட கதை இது . இப்படம் முழுக்க முழுக்க
குடும்பத்தினர் குழந்தைகளைக் கவரும்படி இருக்கும்.
வழக்கமாக தணிக்கைத்துறையினர் திகில் படங்களுக்கு யுஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள்.இப்படத்துக்கு மட்டும்தான் யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
பேய் ,ஆவி சம்பந்தப்பட்ட படத்தை குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள் என்று அவர்களே பாராட்டிச் சொன்னார்கள்..ஆவி என்றால் பயப்பட வேண்டாம் அது நம் முன்னோர்கள்தான். ஆவிகள் எல்லாம்
பாவிகள் அல்ல.
அவை நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்தான். அவை வருவது பயமுறுத்த அல்ல நம்மை ஆசீர்வதிக்கத்தான் என்கிற புதிய பரிமாணத்தில் படம் உருவாகியுள்ளது.ஆவி பற்றியஅச்சம் , நகைச்சுவை இவற்றுடன் கல்வி வியாபாரமாவது, மருந்துகலப்படம் போன்றசமூகக் கருத்தையும் சொல்லியிருக்கிறோம். ” என்கிறார்
தயாரிப்பாளர்.
திருச்சியில் கதை நடந்தாலும் சிங்கப்பூர். மலேசியாவில் மட்டுமல்ல இந்திய
சினிமா வரலாற்றிலேயே முதலில் கம்போடியா அங்கோர்வாட் கோயிலிலும்
படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.ஆவி.பேய் தொடர்பான படக்கதைகள் வழக்கமாக பழையபங்களா காடு, மலை என்று சிலகுறிப்பிட்ட இடங்களில்தான் சுழலும். இப்படம் மலிவாக சொல்லாமல் பாடல்
காட்சிகளுக்கு வெளிநாடுகள் சென்று சுமார் ஒன்றரை கோடி வரை
செலவிட்டுள்ளார்கள்.
.இது ஒருஜாலியான ஆவி கதை. விரைவில் திரையில்.